குசேலனுக்கு எவ்வளவோ விமரிசனங்கள் எழுதியாகிவிட்டது. இதோ நானும் என் பங்குக்கு.
இந்த நல்ல கதையை பி வாசுவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சொதப்பி இருக்க முடியாது. ரஜினி இந்த படத்தில் கிளைமாக்ஸில் மட்டும் வந்திருந்தால் போதும். மீதி சீனெல்லாம் அவர் இல்லாமலே அழகா எடுத்திருக்கலாம். ஆனா மெனெக்கட்டு ஒக்காந்து யோசிச்சு ரஜினிக்கு நாலு சீன் வேணுமேன்னு சொதப்பி இருக்கார் நம்ம பி வாசு. சந்திரமுகி பார்ட் 2, அண்ணாமலை பார்ட் 2 ரெண்டுமே ஓவர் . பஞ்ச் டயலாக் கருத்து, ரசிகர் கருத்து இதெல்லாம் தேவையில்லாமல் பேரைக் கெடுக்கும் விஷயங்கள்.
சரி ரஜினி சீன்ஸ்தான் அப்படின்னா, வடிவேலு? சந்திரமுகியிலேயே ஓவரா இருந்திச்சு வடிவேலு "காம" டி. குசேலனிலேயோ ரொம்ப ஓவர். இந்த படத்துக்கு காமடியே தேவையில்லை. அதிலும் "காம" டி எந்த ரஜினி படத்துக்கும் தேவையேயில்லை.
அடுத்தது மியூசிக். சாதா மியூசிக்லேயே எல்லா பாட்டும் ஹிட்டாகும் ரஜினி படத்துக்கு இப்படி ஒரு சோதனை. பாபாலேயே பாட்டு நல்லத்தான் இருந்திச்சு; ஆனா இங்கேயோ ரஜினி திரையில் வராத "சொல்லம்மா சொல்லம்மா" பாட்டு மட்டும் தான் நல்லாருக்கு. உதித் நாராயணன் சோதனைக்கு அப்பறம் இதுலே தலேர் மெஹந்தி. They are good singers in hindi / punjabi; but their style doesnt suit Rajini.
அப்பறம் நம்ம தமிழ் பாடலாசிரியர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: "தயவு செய்து பழைய ரஜினி படப் பெயர்களைப் பாட்டில் வைப்பதை நிறுத்துங்கள். 'காளை காளை' லே இருந்து 'பில்லா ரங்கா பாட்ஷா' வரை ரொம்ப பாத்துட்டோம் போதும். இதுலே 'போக்கிரி ராஜா பொல்லாதவன்' . விட்டுருங்க பிளீஸ்.". ரோபோவிலேயாவது இது தொடராதுன்னு நம்புவோம்.
என்னதான் இருக்கு படத்திலேன்னு கேட்டா பசுபதி மற்றும் கிளைமாக்சில் ரஜினி. மற்றவை எல்லாம் வேஸ்ட்; நயன்தாரா மீனாவுந்தான்.
No comments:
Post a Comment