இதோ சென்ற ஆண்டில் வாங்கி படித்து முடிக்காத பட்டியல்:
பாதி வரை படித்தவை:
- எஸ் ராமகிருஷ்ணன் கதைகள்
- ஜெயமோகன் சிறுகதைகள்
- Blink - Malcolm Gladwell
- Imagining India - Nandan Nilakani
- The Story of my experiments with Truth - M K Gandhi
- ஆழ்வார்கள் எளிய அறிமுகம் - சுஜாதா
- தட்டாதே திறந்திருக்கிறது - அப்துல் ரகுமான்
- பார்த்திபன் கனவு - கல்கி
- உலக சினிமா - எஸ் ராமகிருஷ்ணன்
- The Inheritance of Loss - Kiran Desai
- The White Tiger - Aravind Adiga
- The Namesake - Jhumpa Lahiri
- சுட்டு விரல் - அப்துல் ரகுமான்
- நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்
ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்கிற புத்தகத்தில் அவரால் சிபாரிசு செய்யப்பட்டவற்றுள் என்னால் படிக்க முடியம் என்று நான் நம்பிய சிறு பட்டியல் ஒன்று தயாரித்தேன். சுமார் 50 புத்தககங்கள் அதில் இருந்தன. இது தவிர சுஜாதாவின் புத்தககங்கள் கொண்ட மற்றொரு சிறு பட்டியல் வேறு இருந்தது.
இந்த இரண்டு பட்டியல்களுடன் களமிறங்கினேன்! பட்ஜெட்டை இரண்டில் இருந்து மூவாயிரமாக அதிகரித்தேன். அத்தோடு இந்த முறை அதிக எழுத்தாளர்கள் மற்றும் அதிக புத்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தீர்மானித்தேன்.
அதனாலயே வெறும் மூன்று தொகுதிகளுடன் நிறுத்திக் கொண்டு, பல நாவல்களை வாங்கினேன். வாங்காமல் விட்ட சிறுகதை தொகுதிகள் அசோகமித்திரன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், யுவன் சந்திரசேகரன், கந்தர்வன் ஆகியோர் எழுதியவை.
நாவல்களில் விடுபட்டவை, தி ஜா வின் மோகமுள், கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் யவன ராணி; கடல்புறா, அகிலனின் சித்திரப்பாவை; பாவைவிளக்கு, வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம்; கருவாச்சி காவியம், கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன் ஆகும்.
இந்த ஆண்டு வாங்கியவை:
- சில்வியா - சுஜாதா
- பெண் இயந்திரம் - சுஜாதா
- கொலையுதிர் காலம் - சுஜாதா
- சுஜாதாவின் குறுநாவல்கள் - மூன்றாம் தொகுதி ௦(கணேஷ் - வசந்த்)
- ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
- காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
- கடல்புரத்தில் - வண்ணநிலவன்
- கம்பாநதி - வண்ணநிலவன்
- காகங்கள் - சுந்தர ராமசாமி
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
- சாயாவனம் - சா கந்தசாமி
- பொய்த் தேவு - க நா சுப்ரமண்யம்
- ஒரு கடலோரகிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
- பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
- நாஞ்சில் நாடன் கதைகள்
- கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி
- வாஷிங்டனில் திருமணம் - சாவி
- மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
No comments:
Post a Comment